WELCOME

MY FRIENDS

Thursday, September 26, 2013

Function Key - எதற்கு?....

Function Key - எதற்கு?....
நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில்உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர்.அவற்றைப் பற்றி பார்க்கலாம்.
F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.
F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல
Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the printpreview window in Microsoft Word.
F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தைமுழுவதையும் மாற்ற பயன்படுகிறது.
F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Closeall Programs.
Ctrl+ F4 will closecurrent Program.
F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் SlideShow ஸ்டார்ட்செய்ய.
F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.
F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsingஐ ON செய்ய பயன்படும்.
F8
விண்டோஸ் ஸ்டார்ட்ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்
F9
Quark 5.0 வில் Measurementtoolbarஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.
F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.
F11
இன்டெர்நெட்பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழுஸ்க்ரீன்க்கு கொண்டு பயன்படும்.
F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

Wednesday, September 25, 2013

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்க
நேரில்சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது
அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபட
ியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களி பதிவு செய்தவர்கள், இந்த இணைய
தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதிசான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக
கையில்வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதளமுகவரிwww.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று
click here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக்செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில்I agree என்று சொடுக்கி அடுத்து வரும்
பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில்முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்ததேதி, குடும்ப அட்டை
எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும்
பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualificationdetail, Technicaldetail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number
Create ஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualificationdetail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக்செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில்கிளிக் செய்து Save
கொடுக்கவும். இதே போன்று Technical Detailம்செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால்Print ID Card என்று இருக்கும் அதை கிளிக்செய்து பிரிண்ட் எடுத்து
கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில்சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : RPD2013M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )
பதிவு செய்த ஆண்டு : 2013
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : RPD2013M00007502
Password : dd / mm / yyyy
கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..
அவ்வளவு தான் நண்பர்களே.. இனிகால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின்
சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..
http://www.tnvelaivaaippu.gov.in/
www.tnvelaivaaippu.gov.in

Sunday, September 22, 2013

உயில் எழுதுவது எப்படி...?

உயில் எழுதுவது எப்படி...?
..............................................
ஒருவர்,தான் சம்பாதித்தசொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு,
எந்தவிதப்பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதேஉறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப்பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத்தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல.
உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம்,பிறரின் மேல்உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில்யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
உயில் — கட்டாயம்என்ன ..?
..............................................
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை.
ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள்
இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.
‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர்கருதினால்,சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம்.
ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது.
பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்
தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ்ராஜா.
உயில் – எப்படி எழுதுவது..?
...............................................
‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம்.
எந்த மொழியில்வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக்கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை.
உயிலில்ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக்கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக்குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களைமிகத் தெளிவாகஎழுத வேண்டும்.
அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாகஎழுத வேண்டும்’’
உதாரணமாக...
எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை,பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.
என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை.
அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன்.
கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன்.
நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை.
நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும்.
மேற்கூறப்பட்ட விஷயங்கள் என்குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாகஎழுதலாம்.
‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும்.
வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள்போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள்பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.
உயிலில்தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ்,
‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும்.
பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.
உயில் அமல்படுத்துபவநராக ஒருவரை நியமிப்பது அவசியம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம்.
அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு.
ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில்.
மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில்.
முஸ்லிம் தனிநபர்சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில்தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும்.
மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கிஉயில் எழுத முடியும்.
• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
உயில்கள் பலவிதம்...!
.........................................
குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில்,கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்க கூட்டு உயில்,போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன.
இதில்,சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.
உயில் எப்போது செல்லாமல் போகும்...?
....................................................................
குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.
சில டெக்னிக்கலானவார்த்தைகள்...!
..............................................................
Will உயில் (விருப்ப ஆவணம்)
Testatorஉயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate..
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personalAct முஸ்லிம் தனிநபர்சட்டம்
Guardian முஸ்லிம்தனிநபர்சட்டம்
Witness சாட்சி
‘ஆன் லைன்’ உயில்...
.......................................
உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது.
ஒரு வழக்கறிஞர்,உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம்.
24 மணிநேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.
ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும்.
தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்!
ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.

Saturday, September 21, 2013

தமிழில்‘ஆதார்’ இணையதளம்!

தமிழில்‘ஆதார்’ இணையதளம்!
http://uidai.gov.in/ta/
இந்த இணையதளத்தில் அடையாள அட்டை ஆணையம் தொடர்பான தகவல்களையும் ஆதார் அட்டைகுறித்த சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்துக்கு செல்ல க்ளிக் செய்க..
http://uidai.gov.in/ta/

பழுதான சிடியைஎவ்வாறுபழுதுபார்ப்பது...??

பழுதான சிடியைஎவ்வாறுபழுதுபார்ப்பது...??
நமதுவீடுகளில் சிடி அல்லது டிவிடிக்கள் பழுதாகிவிட்டால் அதை பழுதுபார்ப்பதற்கும் அதிக செலவாகும். ஆனால் வீட்டிலேயே அவற்றை குறைந்த செலவில் பற்பசை கொண்டு டிவிடிக்கள் அல்லது சிடிக்களின் பழுதுகளைநீக்க முடியும். பின்வரும் எளிய வழிகளைப் பின்பற்றினால்மிகஎளிதாக சிடிமற்றும் டிவிடிக்களின் பழுதுகளை சரி செய்ய முடியும்.
முதலில்சிடி அல்லது டிவிடியை வெளியில் எடுக்க வேண்டும். பின்அதன்பின்புறத்தை
ப்பார்க்க வேண்டும். ஏனெனில்பின்புறத்தில் ஏகப்பட்ட கீறல்கள் இருக்கலாம். மிகப்பெரிய கீறல்கள் இருந்தால் அந்த சிடிக்களை பழுதுபாக்க முடியாது. கீறல்கள் சிறயதாக இருந்தால் அவற்றைஎளிதாக சரிசெய்யமுடியும்.
வெளியில் எடுத்த சிடியை சோப்பு தண்ணீரால் மென்மையாக கழுவ வேண்டும். அதன் மூலம்கீறல்களை ஏற்படுத்தும் சிறிய துகள்களைக்கூட நீகக முடியும்.
கழுவியபின்அந்த சிடியை சுத்தமாக இருக்கும் ஒருதுணியின்மீதுவைக்க வேண்டும்.
பின்பற்பசையை எடுத்து சிடியின் முன்பகுதிமு ழுவதும்சிறிய சிறிய வட்ட வடிவில்வி ரல்களால் பரப்ப வேண்டும்.
பின்அந்தசிடியை ஒரு சமமான பகுதியில்வைக்க வேண்டும். பின்விரல்களால் மிகவும் மென்மையாக அந்த பற்பசையை சிடியில் தேய்க்க வேண்டும்.
அதன்பின்ஒரு ஐந்து நிமிடங்கள் பற்பசையை சிடிமீதுஅப்படியேவைத்திருக்க வேண்டும்.
ஐந்துநிமிடங்கள் கழித்துகுளிர்ந்த நீரில் சிடியில் உள்ள பற்பசையைகழுவ வேண்டும். அதாவது சிறிதளவு பற்பசைகூட சிடியில் இல்லாத அளவிற்கு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பின்டிஷ்யுபேப்பரைக் கொண்டு சிடியை உலர்த்த வேண்டும். ஏனெனில்இந்த பேப்பர்மிகவும் மென்மையாக இருக்கும். அதோடு சிடியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதோடு பற்பசையும்முழுமையாக நீங்கிவிடும்.
சிறிது நேரம்கழித்துமுழுவதும்காய்ந்துபோன சிடியை நாம்பயன்படுத்த முடியும்.

Wednesday, September 18, 2013

இருமலுக்கு இயற்கை வைத்தியம

இருமலுக்கு இயற்கை வைத்தியம்
குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு வந்தாலும் பாடாய்ப்படுத்தும். இருமலால் அவதியுறும்பொழுது நீங்கள் இந்த இயற்க வைத்திய முறைகளைபயன்படுத்தி பயன் காணலாம்.
கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் ங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேநில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துஆயில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வந்ஃருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல்விலகிவிடும்.
தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் ஃர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
சிற்றிருமல்
ஃங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது ணிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் குணமாகும்
இரைப்பு இருமலுக்கு
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுணிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
கோழை இருமல்
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.
வறட்டு இருமல்
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு ணிளகைஉடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல்குணமாகும்.
உடல் சூட்டினால் இருமல்
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். ணிளகுத் தூளையும் பனை வல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.
எந்த வகையான இருமலுக்கும்
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்ணியில் வைத்துத் தூள் பண்ஆ அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்ஃர் குடிக்க ஐந்தே நாளில்இருமல்குணமாகும்.
கக்குவான் இருமலுக்கு
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல்குணமாகும்.
ஜலதோஷம் காரணமாக இருமல்
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு ணிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். ணிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை ணிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல்குணமாகும்.

Monday, September 16, 2013

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ??.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ??...
பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்கஅனுமதி வாங்குவத்ற்க்குள் தலைவலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.
அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயைபோக்க தமிழ்நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில்அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம்.
அது மட்டும் இல்லாமல்உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியி
ன் பெயர் மூலமாகவும் தேடலாம்.
www.elections.tn.gov.in/eroll/

Saturday, September 14, 2013

Samsung Galaxy Secretscodes!..

Samsung Galaxy Secretscodes!..
* # 06 # Show IMEI number
* # 0 * # LCD Test Menu
* # * # 4636 # * # * user statisticsand Phone Info
* # 0011 # Displays status informationfor the GSM
*#1234# View SW Version PDA, CSC, MODEM
*#12580*369# SW & HW Info
*#197328640# Service Mode
*#0228# ADC Reading
*#32489# (Ciphering Info)
*#232337# Bluetooth Address
*#232331# Bluetooth Test Mode
*#232338# WLAN MAC Address
*#232339# WLAN Test Mode
*#0842# Vibra Motor Test Mode
*#0782# Real Time Clock Test
*#0673# Audio Test Mode
*#0*# General Test Mode
*#2263# RF Band Selection
*#9090# Diagnostic ConfiguratioN
*#7284# USB I2C Mode Control
*#872564# USB Logging Control
*#4238378# GCF Configuration
*#0283# Audio Loopback Control
*#1575# GPS Control Menu
*#3214789650# LBS Test Mode
*#745# RIL Dump Menu
*#746# Debug Dump Menu
*#9900# System Dump Mode
*#44336# Sofware Version Info
*#7780# Factory Reset
*2767*3855# Full Factory Reset
*#0289# Melody Test Mode
*#2663# TSP / TSK firmware update
*#03# NAND Flash S/N
*#0589# Light Sensor Test Mode
*#0588# Proximity Sensor Test Mode
*#273283*255*3282*# Data Create Menu
*#273283*255*663282*# Data Create SD Card
*#3282*727336*# Data Usage Status
*#7594# Remap Shutdown to End Call TSK
*#34971539# Camera Firmware Update
*#526# WLAN Engineering Mode
*#528# WLAN Engineering Mode
*#7412365# Camera Firmware Menu
*#07# Test History
*#3214789# GCF Mode Status
*#272886# Auto Answer Selection
*#8736364# OTA Update Menu
*#301279# HSDPA/HSUPA Control Menu
*#7353# Quick Test Menu
*2767*4387264636# Sellout SMS / PCODE view
*#7465625# View Phone Lock Status
*7465625*638*# Configure Network Lock MCC/MNC
#7465625*638*# Insert Network Lock Keycode
*7465625*782*# Configure Network Lock NSP
#7465625*782*# Insert Partitial Network Lock Keycode
*7465625*77*# Insert Network Lock Keycode SP
#7465625*77*# Insert Operator Lock Keycode
*7465625*27*# Insert Network Lock Keycode NSP/CP
#7465625*27*# Insert Content Provider Keycode
*#272*imei#* Product code , works on Froyo
*#*#7780#*#* Factory data reset - Clears Google-account data, system and program settingsand installed programs.system will not be deleted, and OEM programs, as well as My Documents (pictures, music, videos)

Friday, September 13, 2013

குழந்தைக்கு

குழந்தைக்கு ஏன் நல்லது?
காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில்ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்தஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.
தினமும் இரவில்விள்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின்ஒரு வெற்றிலையில் எண்ணெய்தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல்இருக்கும்!
நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.
சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும்.
குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.
குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல்கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடைவெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாதஉலர்ந்த திராட்சைகளைவெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணிநேரத்தில்போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ,வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில்வெற்றிலைக் காம்போ சீவியமெல்லியசோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.
பிறந்தகுழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால்சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.
குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.
குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயைசுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.
தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில்வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.