WELCOME

MY FRIENDS

Wednesday, August 28, 2013

செய்திகளை ரகசிய குறியீடு மூலம் இலவசமாக அனுப்ப வேண்டுமா?

செய்திகளை ரகசிய
குறியீடு மூலம் இலவசமாக
அனுப்ப வேண்டுமா?
ஹாலிவுட் திரைப்படங்களில்
வருவது போன்று செய்திகளை ரகசிய
குறியீடு மூலம் இலவசமாக இதன் மூலம்
அனுப்பலாம்.கணினி மொழியில் இதற்கு
cryptography என்று பெயர்.இதன் மூலம் தகவல்
படித்து புரிந்துகொள்ளாத வகையில்
எழுத்துக்கள்
மாற்றப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பப்படும் ,
அவர் இந்த தகவலை உரிய கீ
உபயோகித்து படிக்க கூடிய வகையில்
மாற்றிக்கொள்வார்.
முதலில் இணைய
தளத்திற்கு செல்லுங்கள்.அங்கே Write your note
below என்ற இடத்தில் நீங்கள் அனுப்பவேண்டிய
தகவலை டைப் செய்யுங்கள்
பிறகு கீழே இருக்கும் create note
பட்டனை அழுத்துங்கள்.
ஒரு சங்கேத/ரகசிய குறியீடு போல
கிடைக்கும் .உங்கள்
நண்பருக்கோ அல்லது அலுவலகத்திற்கோ
அனுப்பும் போது இணையதள
முகவரியை விட்டு விட்டு ரகசிய
குறியீடை அனுப்பலாம்.
கிடைத்த இந்த ரகசிய குறியீடை அவர் மீண்டும்
இந்த இணைய தளத்திற்கு வந்து browser இல்
காப்பி செய்து முழுமையான
தகவலை பெற்றுக்கொள்வார்.
இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால்
செய்தியை அவர் படித்ததும்
நம்மெயிலுக்கு அவர் படித்துவிட்டார் என்ற
தகவல் கிடைக்கும் வசதியும் உண்டு .
மேலும் தகவல் படித்தவுடன்
அதுவாகவே அழித்துவிடும் , மீண்டும் படிக்க
நாம் அந்த ரகசிய
குறியீட்டை வைத்திருக்கவேண்டும் .
நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .பிறர்
நம் மெயிலை பார்த்தாலும் கண்டுபிடிக்க
முடியாது.
இணையதள முகவரி : https://privnote.com/

No comments:

Post a Comment