WELCOME

MY FRIENDS

Tuesday, August 6, 2013

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.!

ஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.!
******************************************
ஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம்.
அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத்தருகிறது.இணைய அகராதிகளில் அப்படி வார்த்தையை அடித்து விட்டு அதற்கா அர்தத்தைபெருகிறோமோ அதே போல இதில் உச்சரிப்பு தேவைப்படும் சொல்லை சமர்பித்தால்அந்த வார்த்தையின் உச்சரிப்பை கேட்க முடியும்.
சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் சமர்பிக்கப்படும் வார்த்தைரோஜா வண்ணத்தில் தோன்றுகிறது.அதன் பிறகு அதன் மீது மவுசை நகர்த்தினால் உச்சரிப்பை கேட்கலாம்.
ஒரு சொல்உச்சரிக்கப்படும் விதத்தைஅறிந்திருப்பது பேசும் போதும் பேரூதவியாக இருக்கும் தானே.
இணையதளமுகவரி;http://www.howjsay.com/
செல்போனில் வரும் உச்சரிப்பு!
###############
################
ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிய இன்னொரு சுவாரஸ்யமான சேவை இருக்கிறது. சே இட் என்னும் அந்த சேவை எந்த சொல்லுக்கான உச்சரிப்பு தேவையோ அந்த சொல்லை எஸ் எம் எஸ் வாயிலாக தெரிவித்தால் அதற்கான உச்சரிப்பை செல்போன் அழைப்பு வழியே கேட்டு மகழலாம்.
உச்சரிப்போடு பொருள் விளக்கத்தையும் கோரலாம்.அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்பது தான் ஒரே குறை.
உச்சரிப்பு தொடர்பான மேலும் ஒரு சுவாரஸ்யமான சேவையும் இருக்கிறது.எவால்விங் இங்கிலிஷ் என்னும் இந்த தளத்தில்உலகின் பல பகுதிகளின் ஆங்கில கேட்டறிய முடியும்.
கூகுல் உலக வரைபடத்தின் மீது கிளிக் செய்தால் அந்த பகுதியில் உள்ளவர்களின் ஆங்கில உச்சரிப்பை கேட்க முடியும்.அந்த இடத்தில் பச்சை நிற புள்ளி இருந்தால் ஆறு சொற்களிம் உச்சரிப்பை கேட்கலாம்.சிவப்
பு வண்ண புள்ளி என்றால் ஒரு கதை கேட்கலாம்.
பிரிட்டிஷ் நூலகம் உலகம் உழுவதும் உள்ளவர்களை இப்படி ஆங்கில உச்சரிப்புகளை சமர்பிக்க சொல்லி இந்த தளத்தை உருவாக்கியுள்ளது.
இப்போது சமர்பிக்கும் வசதி இல்லாவிட்டலும் உச்சரிப்பை கேட்கலாம்.
இணையதளமுகவரி;http://www.bl.uk/
evolvingenglish/maplisten.html

No comments:

Post a Comment